நடை பயணத்தில் நாட்டைச் சுற்றி சாதனை படைத்த சஹ்மி ஷஹீதுக்கு ஜனாதிபதி விருது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நடை பயணத்தில் நாட்டைச் சுற்றி சாதனை படைத்த சஹ்மி ஷஹீதுக்கு ஜனாதிபதி விருது!


கடந்த 13. 07 2024 பேருவலையில் இருந்து
நடை பயணத்தின் மூலம் நாட்டைச் சுற்றி வரும் சாதனையை ஆரம்பித்து, 26.08. 2024 அன்று சாதனையை முடித்து பிறந்த ஊர் திரும்பிய திரும்பிய சஹ்மி ஷஹீதுக்கு கடந்த 28.08.2024 அன்று மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் விருது வழங்கி கௌரவித்தார்.

இலங்கயில் எங்கும் செல்லலாம். எந்தப் பிரச்சினையும் இல்லை. இலங்கை மக்கள் அனைவரும் சகோதரர்களே என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டி சுற்றுலா பயணிகளை கவரச் செய்து இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலோங்க வைப்பதே இவரின் நோக்கமாக இருந்தது.

இலங்கையைச் சுற்றி சுமார் 1500 கிலோமீட்டர்களை நடை பயணத்தின் மூலம் சுற்றி வந்து, சகல இன, சகல மொழி மக்களையும் சந்தித்து அவர்களுடன் ஆரவாரமாக பழகி, தோழமை கொண்டு தனது சாதனைப் பயணத்தில் இவர் வெற்றி கண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நாட்டின் சுற்றுலாத் துறைக்காக தன்னை அர்ப்பணித்து சாதனை படைத்த ஷஹ்மி ஷஹீத் அவர்களை ஜனாதிபதி பாராட்டியதோடு, மேலும் சாதனைகளை சாதிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ஆசிர்வாதம் வழங்கினார்.

இவ்வைபவத்தில் இவரது Youtube தளமான Show me the view என்ற பெயரை முத்திரை குத்தி ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி அடங்கிய நினைவுச் சின்னமும் இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

-பேருவளை ஹில்மி


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.