ஷேக் ஹசீனாவின் கடவுச்சீட்டு இரத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஷேக் ஹசீனாவின் கடவுச்சீட்டு இரத்து!


பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட்டை இரத்து செய்வதாக பங்களாதேஷ் இடைக்கால அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பங்களாதேசில் மாணவர்கள் இட ஒதுக்கீடு உத்தரவை எதிர்த்து செய்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் விரைவில் இங்கிலாந்துக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் பங்களாதேசில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவின் அனைத்து நாடுகளின் பாஸ்போர்ட்களை இரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


அதுமட்டுமின்றி முன்னாள் எம்பிக்கள் அனைவரது பாஸ்போர்ட் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருக்கும் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வேறு நாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.