எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவை கட்சித் தொண்டர்கள் மற்றும் புத்திஜீவிகள் சந்தித்து அவர்களது அபிப்பிராயங்களை கேட்டறிந்த ரிஷாத் பதியுதீன் கடந்த வாரம் சஜித் பிரேமதாசவே ஆதரிப்பது என்ற முடிவை அறிவித்தார்.
அதை அறிவித்து நேரத்தில் சற்று நேரத்தில் ஜனாதிபதியிடமிருந்து ரிஷாத் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்றும் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த தொலைபேசி உரையாடல் நீண்ட நேரம் இடம்பெற்றதாக அறிய கிடைத்தது.
தொலைபேசி உரையாடலில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி றிஷாத் பதியுதீனிடம் கோரிக்கை விடுத்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, தற்போது தேர்தல் களத்தில் நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ரிஷாத் விளக்கமளிக்கமளித்துள்ளார்.
ஜனாதிபதி அவர்களே... நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.
நீங்கள் எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறீர்கள். அதை நான் மறக்கவில்லை.
ஆனால் இப்போது நாம் எடுக்க வேண்டிய முடிவானது செய்த உதவியின் அடிப்படையில் எடுக்கக்கூடிய முடிவு அல்ல. தேர்தல் கள நிலவரம், மக்களின் மனநிலை போக்கு போன்றவற்றை கருத்தில் கொண்டு இம்முறை தேர்தல் நிலைமைகள் தொடர்பில் முடிவு செய்ய வேண்டி உள்ளது.
தற்சமயம் மக்களைப் பற்றியும் மக்களின் விருப்பு வெறுப்புகள் பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாக உள்ளது.
மேலும் எமது மக்கள் என்ன கூறினார்கள் என்பது தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது.
நீங்கள் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் அந்த இரண்டு வருடங்களில் எமது மக்களுக்கு நீங்கள் எதுவுமே செய்யவில்லை. அதனால் எமது மக்கள் தங்களது அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்த நிலையில காணப்படுகின்றனர்.
குறைந்த பட்சம் ஐ.தே.க.வையாவது நீங்கள் அதில் போட்டிட்டு இருக்கலாம்.
ஆனால் நீங்கள் அதைக்கூட செய்யவில்லை. நீங்கள் சுயாதீனமாக, சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றீர்கள்.
உங்களை கிராம மட்டத்தில் உள்ள மக்கள் உங்களை ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லை என ரிஷாத் கூறியபோது, அதற்கான சில காரணங்களையும் ஜனாதிபதி றிஷாதிடம் விளக்கியாதாக கூறப்படுகின்றது.
ரிஷாட் பதுருதீன் அவர்கள் ரணில் பக்கம் உறுதியாக இருந்த நிலையில், திடீரென தனது ஆதரவை மாற்றிக் கொண்டது தொடர்பில் பல ஊடகங்கள் பல விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.
சென்ற வாரம் பல கூட்டங்களில் ரிஷாட் பத்ருதீன் அவர்கள் இந்நாட்டை மீட்டெடுக்க முடியும் ரணில் விக்ரம சிங்க அவர்களுக்கு மட்டுமே என பகிரங்க சவால் விடுத்திருந்த நிலையில் திடீரென எதிர்மாறாக தனது ஆதரவை மாற்றிக் கொண்டது குறிப்பிடத்த அம்சமாகும்.
-பேருவளை ஹில்மி