பேருவளையை பிறப்பிடமாகக் கொண்ட சஹ்மி ஷஹீட் , நடைபயணமாக இலங்கை சுற்றி வரும் இலட்சியத்தோடு சாதனை நிலை நாட்ட, சுமார் 45 நாட்களுக்கு முன் பேருளையில் இருந்து தென்பகுதியூடாக நடை பயணத்தில் புறப்பட்டுச் சென்றார்.
சுமார் 50 நாட்களில் இலங்கையைச் சுற்றி வரும் இவரது லட்சிய பயணம் 45 நாட்களில் நிறைவேறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
தென்பகுதியூடாக புறப்பட்டுச் சென்ற சஹ்மி ஷஹீட், கிழக்கு மாகாணம் ஊடகச் சென்று, வட மாகாணத்தை அடைந்து, தற்போது மேல் மாகாணம் மூலம் கொழும்பை வந்தடைந்துள்ளார்.
இவர் இன்று திங்கட்கிழமை 26.08.2024, 3.30 மணியளவில் பேருளையில் புறப்பட்டுச் சென்ற இடத்தை வந்தடைந்து சாதனையை முடிக்க உள்ளார்.
இவரை வரவேற்க பேருவளை மக்கள், பேருவளை நகரத்தில் உள்ள நகர சபை கடற்கரை மைதானத்தில் மிகக் கோலாகலமான வரவேற்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
நாட்டில் இவரை ஆதரிக்கும் அத்தனை ஆதரவாளர்களும் இதில் கலந்து கொண்டு இவரை வரவேற்கும்படி பேருவளை ஏற்பாட்டுக்குழு வேண்டிக் கொள்கின்றது.
-பேருவளை ஹில்மி
-பேருவளை ஹில்மி