அண்மையில் அத்துருகிரியவில் இடம்பெற்ற 'கிளப் வசந்த' மற்றும் மற்றுமொரு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேக நபர்களின் விபரம் பின்வருமாறு,
- தாருகர வருண இந்திக சில்வா - 951350753V
- பெட்டி ஹரம்பகே அஜித் ரோஹன - 199207801772, இலக்கம் 655 இன் கீழ் A, மாக்கும்புற, அஹுங்கல்ல
- மூதுவாதுரதரிந்து மதுஷங்க டீ சில்வா
சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
1. குற்றப்பிரிவு மேல் மாகாண தெற்கு - 072-4222223
2. அதுருகிரிய பொலிஸ் நிலையம் - 071-8591657