ஹமாஸ் இயக்கத் தலைவர் படுகொலையின் காரணமாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 விசேட குழுக்களை நியமிதுள்ளார்.
இதன்படி, தேசிய பாதுகாப்பு தொடர்பான விசேட குழுவொன்றும், பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருப்பதோடு அந்த இரண்டு குழுக்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான உயர்மட்ட குழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இரு குழுக்களும் சமர்ப்பிக்கும் அறிக்கையின் பிரகாரம் உயர்மட்டக் குழு உரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.