
அவ்வாறு இல்லாத பட்சத்தில் கல்விக்காக அதிகளவான பணத்தைச் செலவு செய்வதன் மூலம் இந்த நாடு அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் பலனைப் பெற்றுக்கொள்ளாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் 106 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (24) இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி, புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் கல்வி முறை சீர்திருத்தப்படும் என தெரிவித்தார்.