அரகலய போராட்டக்காரர்கள் இணைந்து உருவாக்கியுள்ள மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே நியமிக்கப்படுவார்.
கொழும்பு, பொது நூலகத்தில், இன்று (29) நடத்திய விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே லஹிரு வீரசேகர இந்த அறிவிப்பை விடுத்தார்.
கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் கல்வி பயின்ற நுவன் போபகே கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார்.
2022 காலி முகத்திடல் போராட்டம் உட்பட பல மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தவர்.மக்கள் போராட்டத்தின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.