மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் முதல் கிலோமீட்டருக்கு ரூ.100 கட்டணம் அரவிடப்படுவதில் மாற்றம் ஏதும் இல்லை, எனினும் இரண்டாவது கிலோமீட்டர் தொடக்கம் ரூ.90 வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.