நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு திருத்தம் அமைச்சுக்களின் பொறுப்புகளில் இருந்தும் தான் ராஜினாமா செய்துள்ளதாக முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (29) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தனது முடிவை அறிவித்தார்.
நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு திருத்தம் ஆகிய அமைச்சுப் பொறுப்புக்கள் விஜயதாச ராஜபக்ஷ வசம் காணப்பட்டன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக விஜயதாச ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக அறிவித்த நிலையில் தான் வகித்த அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.