பேருந்தில் பயணித்த 27 வயதுடைய யுவதியின் முடியை வெட்டியதாக கூறப்படும் முருத்தலாவ பிரதேசத்தை சேர்ந்த மௌலவி ஒருவரை கண்டி தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ்ஸில் யுவதியொருவர் அமர்ந்திருந்த போது, அந்த ஆசனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மௌலவி யுவதியின் தலைமுடியை வெட்டியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தை எதிர்கொண்ட யுவதி, சந்தேகநபரையும், அவர் வெட்டிய தலைமுடியின் பகுதியையும் தனது அலைபேசியில் வீடியோவாக எடுத்துள்ளார்.
மேலும், மடவளை பிரதேசத்தில் வசிக்கும் யுவதி சில தேவைகளுக்காக கண்டி நோக்கி பயணித்த வேளையில் இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார், அவர் அறிவித்ததன் பிரகாரம் பஸ் பயணிகள் சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முருத்தலாவ தெஹியங்க வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.