அத்துருகிரிய ஒருவல சந்தியில் திங்கட்கிழமை (08) பிற்பகல் வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல வர்த்தகரான 'கிளப் வசந்த' என்றழைக்கப்படும் உரேந்திர வசந்த பெரேரா கொல்லப்பட்டார். அவருடன் மற்றுமொருவரும் மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கிளப் வசந்தவின் மனைவியிடம் அனுமதிப்பெற்றுக்கொள்ளாத சட்டவிரோதமான துப்பாக்கி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத துப்பாக்கி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.
மிரிஹானவில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.