செயற்கை நுண்ணறிவு (AI) இலங்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, விவாதத்தை ஒத்திவைக்கும் பிரேரணையை முன்வைக்கும் போது செயற்கை நுண்ணறிவால் மக்களின் வாழ்க்கை, தேசிய பாதுகாப்பு, மதம், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து ஆராயப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உலகளாவிய தொழிநுட்பத்தின் கண்மூடித்தனமான செல்வாக்கு காரணமாக, நாட்டின் சமூகம் மற்றும் மதம் அதன் பலியாகிவிட்டதாகவும், செயற்கை நுண்ணறிவு மூலம் நாட்டின் 2500 ஆண்டுகால கலாச்சார அடையாளம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புத்தபெருமான் போதித்த தர்மம் மற்றும் வசனங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் அழிக்கப்பட ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் பாரபட்சம் காட்டும் தரப்பினரின் உரிமைகளைப் பாதுகாக்க பிற நாடுகளில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், இந்த நாட்டிலும் செயற்கை நுண்ணறிவு மூலம் நடக்கும் தவறான செயல்களை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.