அடுக்குமாடி கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்து 15 வயது சிறுவனும் சிறுமியும் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தில் வசிக்கும் மாணவனும், மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவனும் மாணவியும் கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் கல்வி பயின்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.