பிபிலே சமிந்த எனப்படும் குகுல் சமிந்த என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் பதவிய சம்பதனுவர பகுதியைச் சேர்ந்தவர்.
குறிப்பிட்ட சந்தேகநபர் தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோவை பக்கத்து வீட்டுக்காரர் பதிவு செய்திருந்தார், இது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்தக் குழந்தையை சந்தேக நபர் தாக்கியிருந்த போதிலும் அவருக்குப் பயந்து எவரும் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட அதிகாரிகள் குழுவொன்று குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளனர். சந்தேக நபர் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.