எரிபொருள் விலை திருத்தம் இன்று (30) இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாதாந்திர எரிபொருள் திருத்தத்தின் படி இந்த திருத்தம் இடம்பெறும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், டீசல் விலை இன்றிரவு குறைக்கப்பட்டால், பஸ் கட்டணங்களில் மீண்டும் விலையில் திருத்தம் செய்யப்படாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம் பஸ் கட்டணம் 5 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அது திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளது. குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ. 28 என அறிவிக்கப்பட்டுள்ளது.