இரத்தினபுரி மற்றும் நிவித்திகல கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளை நாளையும் மூடுவதற்கு சப்ரகமுவ மாகாண சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி, இரத்தினபுரி கல்வி வலயத்தின் இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எஹெலியாகொட பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நிவித்திகல கல்வி வலயத்தின் எலபாத மற்றும் அயகம பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளன.
இதேவேளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் வெள்ளத்தினால் சேதமடைந்த பாடசாலைகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்கான நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தென் மாகாண கல்விச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.