பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் லிமிடெட் (PTL) நிறுவனத்தின் தலைவர் ஜெஃப்ரி அலோசியஸின் வெளிநாட்டுப் பயணத் தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளதாக லங்காதீப செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (13) நீதியரசர்களான அமல் பெரேரா, நாமல் பலாலே மற்றும் ஆதித்ய படபெந்திகே ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் ஆறாவது பிரதிவாதியான ஜெஃப்ரி அலோசியஸ் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரில் மூன்று மாதங்களுக்குள் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 1ஆம் திகதி முதல் செப்டம்பர் 12ஆம் திகதி வரை பயண தடை உத்தரவு அமலில் இருக்கும்.
2019ஆம் ஆண்டு சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அலோசியஸ் கைது செய்யப்பட்டார்.
ஜெஃப்ரி அலோசியஸ், திறைசேரி பிணைமுறி மோசடியில் முக்கிய குற்றவாளியான PTL உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் தந்தையாவார். (யாழ் நியூஸ்)