நேற்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய 4 வயதுச் சிறுவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபர், புல்மோடை – ஆசிரிமலை பகுதியில் வைத்து இன்று (05) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், 37 மற்றும் 46 வயதான இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மணலாறு (வெலிஓயா) – கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்த 45 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு இலக்கான நான்கரை வயதுச் சிறுவனை பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்து, சட்ட வைத்திய அதிகாரிக்கு முன்னிலைப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சந்தேகநபர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், புல்மோடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.