ஹம்பாந்தோட்டை - ஹுங்கம திஸ்ஸ வீதி, ரன்ன பிரதேசத்தில் கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (09) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதே பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் ஹார்ட்வேயார் கடை ஒன்றை வியாபாரமாக நடத்தி வந்ததாகவும், நேற்று இரவு முதல் மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு இறங்கும் போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூடு கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தொடர்பில் இன்னும் தெரியவரவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.