பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று வரக்காபொல பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் மற்றும் பெற்றோர் வரக்காபொல வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாலபே – ராஹுல பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வரக்காபொல பகுதியிலுள்ள நீரோடையில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.