இந்த ஆண்டு நவம்பரில் நடைமுறைக்கு வரவுள்ள இ-பாஸ்போர்ட் முறையை கருத்தில் கொண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எனவே, ஜூலை 01 ஆம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், கடவுசீட்டின் 10 ஆண்டு செல்லுபடியாகும் காலம் முடிவடைந்தால் கூடுதலாக ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இ-பாஸ்போர்ட் வழங்கப்படும் வரை மாத்திரமே இந்த கால அவகாசம் வழங்கப்படும் என ஹர்ஷ இலுக்பிட்டிய தெளிவுபடுத்தினார்.
நவம்பர் மாதம் முதல் இ-பாஸ்போர்ட்கள் வழங்கப்பட உள்ளதாகக் கூறிய அவர், கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக இ-பாஸ்போர்ட்டைப் பெறுமாறு கேட்டுக் கொண்டார்.