கடலில் மிதந்த போத்தலில் இருந்து மதுபானம் என நினைத்து விஷ திரவத்தை அருந்திய 'டெவன் 5' நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த ஆறு மீனவர்களில் மற்றொருவரும் தற்போது உயிரிழந்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
டெவோன் 5 படகில் ஆபத்தான நிலையில் இருந்த இருவர் சிங்கப்பூர் வணிகக் கப்பல் மூலம் இன்று (30) மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களில் ஒருவரே தற்போது உயிரிழந்துள்ளதாக, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.