தற்போது நிலவும் வெள்ளம் மற்றும் மோசமான காலநிலை காரணமாக நாளை (03) முதல் பாடசாலைகளை மூடும் அதிகாரம் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கனமழையுடன் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதாலும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாலும் பயண நடவடிக்கைகள் தடைபட்டதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.