நான்கு வயது குழந்தையை கொடூரமாக சித்திரவதை செய்த தாயும் அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகம பொலிஸ் பிரிவில் வசிக்கும் 25 வயதுடைய பெண் ஒருவர் தனது நான்கு வயது மகனை அடித்து, உதைத்து குழந்தையை வீட்டுக்கு வெளியே உள்ள கேட்டில் கயிற்றினால் கட்டி வைத்து கொடூரமாக சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (06) இரவு 9.00 மணியளவில் இதனைப் பார்த்த பிரதேசவாசிகள் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி, வெலிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் குமார உள்ளிட்ட அதிகாரிகள் சந்தேகநபரான பெண்ணைக் கைது செய்ததுடன், சித்திரவதைக்கு உள்ளான நான்கு வயது குழந்தையை வெலிகம வலான மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது, வெலிகம முதுகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதான குழந்தையின் தாயும் அவரது கள்ளக்காதலரும் சேர்ந்து குழந்தையை தாக்கி சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்படி, அவரது கள்ளக்காதலரையும் வெலிகம பொலிசார் கைது செய்தனர்.
மின்சார கேபிள் ஒன்றை சேதப்படுத்தியதாகக் கூறி குழந்தையை இவர்கள் தாக்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை வெலிகம பொலிஸார் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.