16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ, லக்ஷபதி, கன்னகர மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார, இன்று (24) தீர்ப்பளித்தார்.
2021 ஜனவரி முதல் மார்ச் வரை 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர் கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டு மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சட்டமா அதிபர், மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.