15 கோடி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

15 கோடி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!


வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 15 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு அதனை மீள வழங்காமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணொருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.


மாகொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


இதன்போது, அந்த பெண்ணுக்கு சொந்தமான சொகுசு கார், பல ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் மற்றும் இரண்டு மடிக்கனிணிகளை போலிசார் கைப்பற்றியுள்ளனர்.


கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் தனது நண்பரின் ஊடாக சந்தேகநபரை அடையாளம் கண்டதாக வர்த்தகர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


தாம் வாகனங்களை இறக்குமதி செய்வதாகக் கூறிய குறித்த சந்தேகநபரான பெண், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை சுங்கச்சாவடியில் இருந்து விடுவிக்க அவசரமாக பணம் தேவைப்படுவதாக கோரி குறித்த வர்த்தகரிடம் பணத்தினை பெற்றுக்கொண்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


பின்னர் குறித்த பெண் தம்மை சந்திக்கவில்லை என வர்த்தகர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபரான பெண் பல பாரிய பண மோசடிகள் தொடர்பில் முன்னர் குற்றம் சுமத்தப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.


இவருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், களுத்துறை பிரதான நீதவான் நீதிமன்றம் மற்றும் மாளிகாகந்த பிரதான நீதவான் நீதிமன்றில் பல பண மோசடி வழக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.


அத்துடன் போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரிடம் தன்னை நீதவான் என அடையாளப்படுத்தி 636,000 ரூபா பணம் பெற முயன்றதாக குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


இதற்கு மேலதிகமாக போலி கடவுச்சீட்டு தயாரித்தல், காசோலை வழங்குதல் போன்ற பல மோசடிகளில் சந்தேகநபரான பெண் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலத்தில் ஜனாதிபதியுடன் தொடர்புகள் இருப்பதாகக் குறிப்பிட்டு பண மோசடி செய்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 


சந்தேகநபரான பெண், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.