கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) விரிவுரையாளரான கலாநிதி புன்சரா அமரசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ்ஐஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்கள் தொடர்பில் பொய்யான வாக்குமூலத்தை வழங்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது கலாநிதி அமரசிங்க இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)