வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனித கடத்தல் குழுவொன்று தற்போது இலங்கை இளைஞர்களை ரஷ்யாவுக்கு இராணுவ சேவைக்கு அனுப்பும் மோசடியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளத்தில் வேலை தருவதாக கூறி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் முன் வரிசைப் பாதுகாப்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பல மாதங்களாக அவர்களுக்கு உரிய சம்பளம் கூட வழங்கப்படவில்லை எனவும் இது தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்தவொரு நபரும் இராணுவ சேவைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட மாட்டார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எனவே சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக எக்காரணம் கொண்டும் செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களிடம் மேலும் கோரிக்கை விடுக்கிறது.