நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே 22 புதன்கிழமை மூடப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்யான அறிவிப்பை நிவர்த்தி செய்து கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாளைய தினம் பாடசாலைகளை மூடுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் திறந்திருக்கும் எனவும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
விசேட சூழ்நிலைகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களிடமே உள்ளது எனவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது. (யாழ் நியூஸ்)