லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற சிங்கப்பூர் எயர்லைன்ஸ்விமானம் நடுவானில் கடுமையாக குலுங்கியதில் பயணியொருவர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
குறிப்பிட்ட விமானத்தில் 211 பயணிகள் உட்பட 229 பேர் பயணித்துக்கொண்டிருந்தாக சிங்கப்பூர் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக சிங்கப்பூர் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.