கண்டி பகுதியில் இலஞ்சம் பெற்ற காதி நீதவான் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி பகுதியில் இலஞ்சம் பெற்ற காதி நீதவான் கைது!


விவாகரத்து மற்றும் விவாகரத்து ஆணையை வழங்குவதற்காக பெண்ணொருவரிடம் 4,500 ரூபாய் இலஞ்சம் கோரிய போது, ​​கண்டி-உடதலவின்ன பகுதியில் வைத்து காதி நீதவான் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த காதி நீதவான் கைது செய்யப்பட்டுள்ளார்.


ராஜாஎல்ல கும்பக்கடுர பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி உடதலவின்ன பகுதிலுள்ள காதி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு வழங்குவதற்காகவே அந்த பெண்ணிடம் காதி நீதவான் 4,500 ரூபாய் இலஞ்சம் கேட்டள்ளார்.


இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு உத்தியோகத்தர்களால் உடதலவின்ன காதி நீதிமன்றத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்குரிய காதி நீதவான் கைது செய்யப்பட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.