ஈரான் ஜனாதிபதி மொஹமட் ரைஸியின் திடீர் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று (22) பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
இந்த பிரேரணையை முன்வைத்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதாக தெரிவித்தார். அண்மையில் இந்த நாட்டுக்கு விஜயம் செய்த கடைசி அரச தலைவர் ஈரான் ஜனாதிபதி என்பதையும் ரணதுங்க நினைவு கூர்ந்தார்.
உமா ஓயா திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் ஆதரவை வழங்கியதை நினைவுகூர்ந்த அமைச்சர், ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி தனது அனுதாபத்தை தெரிவிக்க முன்வந்தார்.
அதன்படி, சபாநாயகர் உட்பட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அமைச்சர்கள் இருக்கையில் இருந்து எழுந்து ஒரு நிமிடம் மெளனமாக இருந்ததை அடுத்து, அதன் பின்னர் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியது.