பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டதை அடுத்து, முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் அப்பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.
இது சம்பந்தமாக அக்கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவரிடம் தொடர்பு கொண்ட போது, முஜிபுர் ரஹ்மான் அவர்களை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இன்றிரவு வர்த்தமானி அறிவித்தல் வெளியானால் நாளை பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பார் எனவும், அல்லது நாளை வருத்தமான அறிவித்தல் வெளிவந்தால் நாளை மறுநாள் பதவி ஏற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
-பேருவளை ஹில்மி