2023 (2024) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பரீட்சையின் பல வினாக்களுக்கு கருணை புள்ளிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சையின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து எழுப்பப்பட்ட கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது, விஞ்ஞானப் பரீட்சை தாளில் உள்ள சில கேள்விகள் பாடத்திட்டத்திற்கு வெளியே இருப்பது கண்டறியப்பட்டது.
விஞ்ஞான பரீட்சை பாடத்திட்டத்திற்கு புறம்பான வினாக்களுக்கு மாத்திரம் கருணை புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.