மலேசியாவில் உள்ள உணவகம் ஒன்றில் சுடுநீர் கொதிகலன் விழுந்து உயிரிழந்த இளைஞனின் சடலம் அவரது வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இளைஞன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மலேசியாவிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
அங்கு இந்த இளைஞன் அடுப்பில் வேலை செய்து கொண்டிருந்த போது சுடுநீர் கொதிகலன் தவறுதலாக உடல் மீது விழுந்து நீர் ஊற்றப்பட்டதில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
சுடுநீரில் உடலின் ஊற்றியதில் பலத்த காயங்களுடன் மலேசியாவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.