இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு சட்ட ரீதியாக தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.