2022 (2023) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்திருத்தப்பட்ட முடிவுகளை பரீட்சைகள் திணைக்களம் நேற்று வெளியிட்டது.
மொத்தம் 49,312 விண்ணப்பதாரர்கள் மறுபரிசீலனைக்கு விண்ணப்பித்ததாகவும், அவற்றில் 250,311 பதில்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் மீள்திருத்தப்பட்டட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலதிக விவரங்கள் தேவைப்படுவோரைத் தொடர்பு கொள்ளுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.