ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதிக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில், ஞானசார தேரரின் ஜனநாயகக் குரலை முடக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தின் சில ஜனநாயக அமைப்புகளால் ஞானசார தேரரின் சில அறிக்கைகள் மற்றும் நடத்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது அல்லது தவறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஞானசார தேரர், அந்தந்த மத நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் சமாதானத்தை நிலைநாட்டவும், நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் ஆன்மீகத் தளங்களை அழிக்கக்கூடிய முரண்பாடுகளை இல்லாதொழிக்கவும் உழைத்துள்ளதாகவும் அவர்கள் அக்கடிதத்தில் தேரரின் சேவைகளையும் குறிப்பிட்டுள்ளனர்.