நாடளாவிய ரீதியில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டின் ஏனைய பிர தேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாளை (25) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இன்று (24) காலை 10.30 மணிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.