டொனவன் டாக்ஸ் ராஜசேகரால் இலங்கையில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட கார் ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று வியாழக்கிழமை (30) ஜனாதிபதி செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
இது தொடர்பில் ராஜசேகர் தெரிவிக்கையில், இந்த திட்டத்திற்கு அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், அதிக கார்களை உற்பத்தி செய்ய ஜனாதிபதி ஊக்குவிப்பதாகவும் கூறினார்.
மேலும் இந்த வடிவமைப்பாளரின் தந்தையின் பெயரில் 'சேகர் கோப்ரா' என்று பெயரிடப்பட்ட இந்த கார் தனிப்பட்ட மற்றும் நிதி சாதனையை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
"நான் இந்த காரை 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தில், இதேபோன்ற ஒரு காருக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானது, அதை என்னால் அப்போது வாங்க முடியவில்லை,” என்று ராஜசேகர் திட்டத்திற்குப் பின்னால் உள்ள உத்வேகத்தை விளக்கினார். ஆனால் காரை உருவாக்குவது 10 மில்லியன் டாலர் செலவில் ஒரு பகுதி மாத்திரமே என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த வாகனம் தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தால் (NERD) தேவையான மதிப்பீடுகளுக்கு உட்பட்டுள்ளதாகவும், இலங்கை சுங்கம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ராஜசேகர் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)