முழுமையாக பரிந்துரைகளை செயற்படுத்தவில்லையெனில் அடிப்படைவாத தாக்குதல்களை தடுக்க முடியாது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முழுமையாக பரிந்துரைகளை செயற்படுத்தவில்லையெனில் அடிப்படைவாத தாக்குதல்களை தடுக்க முடியாது!


இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும். இல்லையேல் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலை போன்ற அடிப்படைவாத தாக்குதல்கள்  இலங்கையிலும் எதிர்காலத்தில் நடத்தப்படுவதனை தடுக்க முடியாதென ஆளும் தரப்பு எம்.பி.யுமான சரத் வீரசேகர தெரிவித்தார்.


இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும், இந்துக்களையும் படுகொலை செய்வதற்காகவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 4 இலங்கை முஸ்லிம்கள் கடந்த 18 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள் என்றார். 

 

பாராளுமன்றத்தில் நேற்று (22) எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

   

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன,எழுந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த நான்கு இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் தாக்குதல்களை நடத்த இவர்கள் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆகவே அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து மீண்டும் அச்சம் எழுந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ற என்று கேள்வியெழுப்பினார்.


இதற்கு பதிலளித்த சரத் வீரசேகர,


"இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள 4 இலங்கை முஸ்லிம்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். மொஹமட் நுஸ்ரத், மொஹமட் நஃப்ரான், மொஹமட் ரஸ்தீன், மொஹமட் ஃபரிஷ் ஆகிய நான்கு இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவில் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினர்களாவர். இவர்கள் இந்த மாதம் 18 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள்.


இவர்கள் 4 இலட்சம் ரூபாவுக்காக தாக்குதல்களை நடத்த சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும், இந்துக்களையும் படுகொலை செய்வதற்காக இவர்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளதாகவும் 3 அல்லது நான்கு மாதங்களுக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் அடிப்படைவாத கொள்கைகளினால்  ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.


ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுக்கள் அறிக்கைகளை சமர்ப்பித்து பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. ஒருசில இஸ்லாமிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மதரஸா பாடசாலைகள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கம் முழுமையாக பரிந்துரைகளை செயற்படுத்தவில்லை. ஆகவே பரிந்துரைகளை அலட்சியப்படுத்தாமல் செயற்படுத்த வேண்டும் இல்லையேல் இலங்கையில் மீண்டும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற அடிப்படைவாத தாக்குதல்கள் இடம்பெறுவதனை தடுக்க முடியாது" என்றார். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.