பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வன்புனர முயன்ற குற்றத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், மாங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கரையோரப் பொலிஸாரின் மகளிர் படைமுகாமிற்கு இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த குறித்த கான்ஸ்டபிள், அங்கு உறங்கிக்கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வன்புனர முயன்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.