நேற்று (13) பயாகல, மக்கொன பிரதேசத்தில் 03 வயது குழந்தையொன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த சிறுமி மக்கொன, முங்கேன பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் விசாரணையில், சிறுமியின் வீட்டில் உள்ள மின் சோக்கெட்டுடன் தொடர்பு கொண்டு மின்சாரம் தாக்கியதாக தெரியவந்துள்ளது.
பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)