இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவல் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சல், இருமல், தொண்டை புண், தலைவலி மற்றும் சோர்வு, மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தசை அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலை குழந்தைகள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதாகவும், எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.