பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் இந்திய நிறுவனமொன்றிடம் விசா வழங்கும் நடைமுறையை கையகப்படுத்துவதற்கு எதிராகப் பேசிய நபர், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சண்டாரு குமாரசிங்க என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஊடகவியலாளரிடம் கூறுகையில், இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் வருகை விசா வழங்கும் நடைமுறைக்கு எதிராக தான் பேசிய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய விமான நிலைய பொலிஸாரால் தாம் அழைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
பொலிஸ் நிலையத்திற்கு தான் வரவழைக்கப்பட்டதற்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.
மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தன்னிடமிருந்து தகவல் பதிவு செய்யப்பட வேண்டுமா அல்லது வெளிநாட்டு நிறுவனத்திற்கு விசா வழங்குவதை முடிவு செய்தவர்களிடமிருந்து அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தேசிய சொத்துக்கள் விற்கப்படும் போது குரல் எழுப்பும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதையும் மற்றும் இலங்கை நபர் ஒருவர் தனது மனைவியின் வருகைக்கான விசா ரத்து செய்யப்பட்டதாகக் கூறி இந்திய விசா வழங்கும் அதிகாரிகளைக் குற்றம் சாட்டியதையும் காட்டும் காணொளி அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியது .
ஒரு இந்திய நபர் தனது அல்லது அவரது மனைவியின் விசா அந்தஸ்தையும் தான் இலங்கை குடிமகன் என்ற உரிமையையும் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். அவர் தனது விசாவைத் தீர்மானிக்கும் உரிமை தனக்கு இருப்பதாகக் கூறி, வரி செலுத்துபவராக தனது நிலையை வலியுறுத்தினார், அவர் அண்ணளவாக ஒவ்வொரு ஆண்டும் ரூ. 4 மில்லியன் ரூபாய் வரி செலுத்தியதாக தெரிவித்தார்.
இந்த விடயத்தில் குரல் எழுப்பும் உரிமையை அவர் வலியுறுத்தியதுடன், பல இலங்கை நிறுவனங்கள் அதனை கையாளும் போது இலங்கை அரசாங்கம் ஏன் இந்திய நிறுவனத்திற்கு விசா வழங்கும் முறையை விற்க வேண்டும் என வெறுப்பை வெளிப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.