சினோபெக் நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது .
நேற்று நள்ளிரவு (30) முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொண்டிருந்த நிலையில் சினோபெக் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 லீற்றர் பெற்றோல் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோல் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 420 ரூபாவாகும் .
அத்துடன், ஒட்டோ டீசலின் விலை 27 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 333 ரூபாவாகும்.
சினோபெக் சுப்பர் டீசல் விலையும் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.