50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து பையின் விலையை இன்று (01) முதல் 50 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து தொழிற்சாலை நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
அதன்படி 50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து பையின் புதிய விற்பனை விலை 2,400 ரூபாவாக இருக்கும்.
இந்த விலைக் குறைப்பானது உள்ளூர் கட்டிட தொழிலை ஊக்குவிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுவதாக சீமெந்து தொழிற்சாலை நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.