சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 600 மில்லியன் ரூபா பெறுமதியான ஆறு அதி சொகுசு SUV வாகனங்களின் உரிமையாளர்களை உடனடியாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லங்காதீப நாளிதழின் படி, இந்த வாகனங்கள் நாட்டுக்கு 300 மில்லியன் ரூபா சுங்க வரியை இழக்கும் வகையில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதுடன், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ள தரவுகளை நீக்கி சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆறு முறைப்பாடுகளை தாக்கல் செய்திருந்த ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த வாகனங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 07 ஆம் திகதிக்கு முன்னர் இந்த மூன்று மொண்டேரோக்கள் மற்றும் மூன்று சொகுசு ஜீப் வண்டிகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு வாகன உரிமையாளர்களுக்கு நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.