பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 27 வயது இளைஞன் கொலை; விசாரணை தீவிரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 27 வயது இளைஞன் கொலை; விசாரணை தீவிரம்!


பேலியகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மினுவாங்கொடை, ஹொரம்பல்ல, வெரகொடமுல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.   


இவர் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்வதற்காக மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்திற்குச் சென்றுள்ளார். 


சென்றவர் மறுநாள் காலை வரை வீடு திரும்பவில்லை என்பதால் அவரது தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 


முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த இளைஞன் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 


பின்னர், இந்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பேலியகொட பொலிஸாரிடமிருந்து  தகவல் கிடைத்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


பின்னர், குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இளைஞனின் தந்தைக்கு தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டுள்ளதாகவும் தனது மகன் அலைபேசியில் அழும் சத்தம் கேட்டதாகவும் தந்தை தெரிவித்துள்ளார். 


இது குறித்து அறிந்துகொள்வதற்காகக் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி சட்டத்தரணி ஒருவருடன் உயிரிழந்த இளைஞனின் உறவினர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். 


ஏப்ரல் 25 ஆம் திகதி இளைஞன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் இவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் இளைஞனின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். 


இதேவேளைச், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். 


இளைஞன் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கவுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


எவ்வாறாயினும், அவரது உடல் நிலை ஆபத்தான நிலையிலிருந்ததால் இளைஞனைக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


இளைஞனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வைத்தியர்கள் இளைஞனைப் பரிசோதித்த போது இவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 


அத்துடன் இளைஞனின் மரணத்தின் பின்னர் இவர் தொடர்பில் மினுவாங்கொடை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்ட சில விடயங்கள் பொய்யானவை என தந்தை சுட்டிக்காட்டியுள்ளார். 


அது மாத்திரமின்றி பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணை அதிகாரிகளின் கொடூரமான தாக்குதல்களினால் இளைஞன் உயிரிழந்துள்ளதாக இளைஞனின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு இந்த விடயம் தொடர்பிலான உண்மைகள் கண்டறியப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.